கடந்த ஆண்டு 44 பேருடன் மாயமான அர்ஜெண்டினா கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு

453
Argentine navy

அட்லாண்டிக் கடலில் கடந்த ஆண்டு 44 பேருடன் மாயமான அர்ஜெண்டினா கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதி வழக்கமான ரோந்துப் பணிக்காக சென்ற அர்ஜெண்டினா நீர் மூழ்கிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

நீர்முழ்கிக் கப்பலின் பேட்டரி அமைப்பில் தண்ணீர் புகுந்ததால் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பல் கடல் மட்டத்தில் இருந்து 800 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஓஷன் இன்பினிட்டி என்ற தனியார் நிறுவனம் கப்பலை கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.