இயக்குநர் கே.பாலசந்தரின் மனைவி ராஜம் காலமானார்

398

மறைந்த திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தரின் மனைவி ராஜம் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

பிரபல திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தரின் மனைவி ராஜம் (82). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவுடன் இருந்துள்ளார். இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு திரைப்பட துறையினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறுதிச் சடங்கு இன்று மாலை 3 மணிக்கு மேல் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of