‘என்னது டிரான்ஸ்பரா..’ அதிர்ச்சியில் ஆசிரியருக்கு நேர்ந்த கொடுமை..! சோகத்தில் குடும்பத்தினர்..!

570

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களின் பணிகள் காலியாக இருக்கும் இடங்களுக்கு ஆசிரியர்களை சேர்க்க கவுன்சிலிங் கூட்டம் நடைபெற்றது. இதில், திருவிடைமருதூர் ஒன்றியத்தில் மட்டும் 12 ஆசிரியர்கள் பணிநிரவல் அடிப்படையில் டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர்.

அப்போது, பணிநிரவல் அடிப்படையில் மூத்த ஆசிரியர்கள் டிரான்ஸ்பர் செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் ஆசிரியர்கள் தற்போது பணிபுரியும் இடங்களை விட்டுவிட்டு, டிரான்ஸ்பர் செய்யப்பட்ட இடங்களுக்கு பணியில் அமர வேண்டும் என்று தலைமை ஆசிரியர் வாய்மொழி உத்தரவிட்டார்.

அதன்படி, திருபுவனம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த ஆசிரியர் லதாவுக்கும் டிரான்ஸ்பர் செய்யப்பட்ட தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லதா அங்கேயே மயங்கி விழுந்தார்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள், லதாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிந்து விட்டார். லதா உயிரிழந்துள்ளது ஆசிரியர்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of