சட்டம் தான் ராஜாவுக்கு எல்லாம் ராஜா – மோடி

341

ஜனநாயக நாட்டில், சட்டம் தான் ராஜாவுக்கு எல்லாம் ராஜா, அனைத்திற்கும் மேலானது என்று, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச நீதித்துறை மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், சேவை மற்றும் உண்மைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் மகாத்மா காந்தி என்று கூறினார்.

காந்தியின் வாழ்க்கையே, நீதித்துறையின் அடித்தளம் என்றும், ஜனநாயக நாட்டில், சட்டம் தான் ராஜாவுக்கு எல்லாம் ராஜா, அனைத்திற்கும் மேலானது எனவும் அவர் தெரிவித்தார்.

தனிநபர் தகவல்களின் பாதுகாப்பு, சைபர் குற்றங்கள் போன்றவை நீதித்துறைக்கு சவாலாக உள்ளதாக கூறிய பிரதமர் மோடி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இதை நீதித்துறை முறியடித்து வருவதாகவும் தெரிவித்தார்.

பாலின சமத்துவம் இன்றி எந்த ஒரு நாட்டினாலும் வளர்ந்துவிட முடியாது என்றும், சுதந்திரத்திற்கு பின், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கிய சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவும் அவர் கூறினார்.

உலக அளவில் பேசப்பட்ட உச்சநீதிமன்றத்தின் சில முக்கிய தீர்ப்புகளை நாட்டு மக்கள் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டதாகவும் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of