ஸ்டாலின் கருத்து கந்தசாமியாக மாறிவிட்டார் – சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்

392

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து கந்தசாமியாக மாறிவிட்டார் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.

விழுப்புரம் அருகே உள்ள தளவானூர் பகுதியில் 13 கிராமங்கள் பயன்பெறும் வகையில், 25 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிய அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மு.க.ஸ்டாலின் யாரோ சொல்வதை எழுதி வைத்து கூட்டங்களில் பேசி வருவதாக தெரிவித்தார்.

அண்மை காலமாக அவர் கருத்து கந்தசாமியாக மாறிவிட்டதாகவும் விமர்சித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of