ஆபாசப் படம் பார்த்தால்.., – சட்டத்துறை அமைச்சர் சொன்ன சர்ச்சைக் கருத்து..!

512

கடந்த 2012-ஆம் ஆண்டு அன்று கர்நாடக சட்டமன்றத்தின் நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அந்த ஆட்சியின் போது கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த லட்சுமண் சவடி தனது செல்போனில் ஆபாசப்படம் பார்த்தது தெரியவந்தது.

இந்த விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைடுத்து, அவர் தனது பதவியை ராஜுனாமா செய்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நடந்து வருகிறது.

இந்த ஆட்சியில் ஆபாசப்படம் பார்த்து சர்ச்சையில் சிக்கிய லட்சுமண் சவடிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் மதுசாமி, “ஆபாசப்படம் பார்ப்பது தேசவிரோத செயல் அல்ல. ஆனால் அது தவறான விஷயம் தான். எதிர்பாராதவிதமாக செல்போனில் ஆபாச படம் பார்த்துவிட்டார்.

அதற்காக அவருக்கு அமைச்சர் பதவி வேண்டாம், துணை முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறுவது சரியல்ல.” என்று கூறினார். இவர் பேசியுள்ள இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.