அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் சட்டம் தன் கடமை செய்யும்

363
pandiyarajan

தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் சட்டம் தன் கடமை செய்யும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125 ஆண்டினை முன்னிட்டு, கோவை தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் சட்டம் தன் கடமை செய்யும் என்றார். சி.பி.ஐ விசாரணைக்கு மாநில அரசு எந்த இடையூறும் செய்யவில்லை என்று கூறினார்.

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் விரைவில் தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.