கஜா புயல் பாதிப்பு! லாரன்ஸ் செய்த மாபெரும் உதவி!

628

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் கணேசன் (வயது 70). சமூக சேவகரான இவர் 108 ஆம்புலன்ஸ் சேவை போல இலவச கார் சேவை செய்து வருகிறார்.

பிரசவம், அவசர சிகிச்சையோ என்றால் கணேசனுக்கு போன் செய்தால் போதும் உடனே சம்பவ இடத்திற்கு தனது காரில் சென்று விடுவார். எந்தவித கட்டணமும் இல்லாமல் தமிழகத்தின் எந்த பகுதிக்கும் அழைத்து செல்வார்.

இந்நிலையில் இவர் வசித்து வந்த வீடு, கஜா புயல் தாக்குதலின் போது மோசமாக சேதமடைந்துள்ளது. இதனை அறிந்த நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்.

அதாவது அவருக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதிதாக வீடு கட்டி தரவுள்ளார். இதற்காக அப்பகுதி பொதுமக்கள் ராகவா லாரன்சை பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of