கிளம்பிய பெரும் எதிர்ப்பு..! மாற்றப்பட்ட ‘லஷ்மி பாம்’ படத்தின் பெயர்..!

3083

கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் காஞ்சனா. ராகவா லாரன்ஸ் இயக்கிய இந்த திரைப்படம், லஷ்மி பாம் என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு இந்தி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஸ்ரீ ராஜ்புட் கர்னி சேனா என்ற அமைப்பு, நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், இந்துக் கடவுளான லஷ்மியை அவமதிக்கும் வகையில், இந்த படத்தின் பெயர் இருப்பதாகவும், அதனை மாற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக்கொண்ட படக்குழு, படத்தின் பெயரை லஷ்மி என்று மாற்றியுள்ளனர். அக்ஷய் குமார், கியாரா அத்வானி நடிக்கும் இந்த படத்தையும், ராகவா லாரன்ஸ் தான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement