இந்தி திணிப்பு பிரச்சனை..! லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்..! கொந்தளித்த நெட்டிசன்ஸ்..!

888

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தவர் லஷ்மி ராமகிருஷ்ணன். இவர் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில் கூட ஹவுஸ் ஓனர் என்ற அவர் இயக்கிய திரைப்படம் வெளியாகி, விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் டுவிட்டரில் இந்தி தினிப்பு பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “இந்தி தினிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் குழந்தைகள் தமிழ் மட்டும் தான் பேசுகிறார்களா.

புதிய மொழி கற்றுக்கொள்வதால், தாய் மொழி மீதான பற்றுக்குறையாது. தாய் மொழியை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துக்கு முற்றிலும் மாறாக இயங்குகிறோம்”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த டுவீட்டைப் பார்த்த நெட்டிசன்ஸ் பலர் அவரது கருத்துக்கு எதிராக ரீடுவீட் செய்து வருகின்றனர். ஒரு சிலர் இதற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவிக்கின்றனர். சிலர் இன்னொரு மொழிக் கற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் அதை தினிக்கக்கூடாது என்றும் தங்களது கருத்துகளை நியூட்ராலாக தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of