“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்! ஏன் தெரியுமா..?

957

பன்னையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் குமார், தற்போது சிந்துபாத் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய்சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் கடந்த ஜூன் 21-ந்தேதி வெளியாக இருந்த நிலையில், பாகுபலி தயாரிப்பாளருக்கு தர வேண்டிய தொகையைச் செலுத்தாததால் வெளியிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.

சமரசப் பேச்சுவார்த்தைக்கு பின் சிந்துபாத் படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 28-ந்தேதி என அறிவிக்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகும் சிந்துபாத் படத்தால், ஏற்கனவே இதே ரிலீஸ் தேதியை அறிவித்து காத்திருந்த படங்கள் தியேட்டர் கிடைக்காமல் அல்லது குறைவாகக் கிடைக்கலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டன.

இதனால் ஹவுஸ் ஓனர், தர்மபிரபு போன்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதில் ‘பெரிய படங்களை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகள் சிறியவற்றை மூழ்கடிக்கின்றன. விஜய் சேதுபதி சிப்பாயாக எங்கள் சிறிய படத்தை காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே திட்டமிடப்பட்ட படங்களுக்கு நேரத்தை கொடுக்க தயாரிப்பாளர்களிடம் கூறுங்கள். தேதியை 15 நாட்களுக்கு முன்னால் அறிவிக்கவும்’ என கூறியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of