“அடப்பாவமே.., இதுக்கெல்லாமா வரி..” வெளிநாட்டில் விதிக்கப்பட்ட வினோத வரி..! கொதித்தெழுந்த மக்கள்..!

323

இந்தியாவில் பொருளாதார மந்தநிலை நிலவி வருவதைப்போன்று, லெபனான் நாட்டில் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலை இருந்து வருகிறது. இந்தியா ரூபாயின் மதிப்பின் படி, ஒரு லட்சம் லெபனான் நாட்டின் பணம், 4 ஆயிரத்து 710 ரூபாய் மதிப்பளவில் உள்ளது.

இதே நிலை நீடித்தால் நிலைமை மோசமடையும் என்பதை உணர்ந்த அந்நாட்டு அரசு, வாட்ஸ் அப், பேஸ்புக் மெசஞ்சர், ஆப்பிள் பேஸ்டைம் ஆகியவற்றை பயன்படுத்திப்பேசக்கூடிய அழைப்புகளுக்கு வரி விதிக்க அதிரடியாக முடிவு செய்தது.

இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, அந்நாட்டில் போராட்டம் வெடித்து சிதறியது. கொதித்தெழுந்த மக்கள், வீதிகளில் இறங்கி போராட ஆரம்பித்தனர். போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த உத்தரவை அரசு திரும்பப்பெற்றது. இருப்பினும் போராட்டம் நின்ற பாடில்லை. எல்லா மக்களுக்கும் உணவு, எரிபொருள், மற்ற அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றி வைக்க வேண்டும், இல்லையேல் பதவி விலக வேண்டும் என்று மக்கள் முழங்கி வருகின்றனர். பிரதமர் சாத் அல் ஹரிரி அரசு என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது