Legend-ன் அந்த அதிரடி முடிவு உண்மை தான்..? வெளியான தகவல்..!

1160

தமிழகத்தின் பிரபலமான நிறுவனங்களின் பட்டியலை எடுத்தல் அதில் முக்கியமான நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ். தற்போது இந்த நிறுவனத்தை விடவும், Legend சரவணன் பிரபலமாக இருந்து வருகிறார். இதற்கு  அவரது வசீகர முகத்தோற்றமும், விளம்பரங்களில் அவரது அசத்தலான நடனமும் தான் காரணம்.

சில நேரங்களில் நடன இயக்குநர் பிரபு தேவாவுக்கே நடனத்தில் டாஃப் கொடுப்பார் என்றே சொல்லலாம். அவரது நிறுவனத்தின் விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், அடுத்த கட்டத்திற்கு மேலே சென்று திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

பொய் செய்தி தான் என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது அது உண்மை தான் என்று கூறும்படி, ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஆம், லெஜன்ட் சரவணன் நடிக்கும் திரைப்படத்தின் பூஜை இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இதில் இன்னுமொரு கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பது ஹாரிஸ் ஜெயராஜ் என்றும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு இசைமைக்கும் அறிய வாய்ப்பை பெற்றதில் இருந்தே, ஹாரிஸின் தற்போதைய நிலை என்ன என்பது புரிகிறது என நெட்டிசன்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த கூட்டணியை வைத்து பார்க்கும்போது, படம் மெகா ஹிட் அடிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்று லெஜன்ட் சரவணனின் தீவிர ரசிகர்களும் கூறி வருகின்றனர். குட் லக் லெஜன்ட் சரவணன்..,

Advertisement