பாலிவுட் படத்தில் நடிக்க எனக்கு ஆர்வம் உள்ளது | Leonardo Dicaprio

270

இந்திய சினிமா நடிகர்கள் இப்பொது ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். அதே போல ஹாலிவுட்டில் நடிக்கும் சில வில்லன் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கின்றனர். அவர்களின் வரிசையில் தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்ட் டிகாப்ரியோ ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார். 1997ம் ஆண்டு வெளியான டைட்டானிக் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பரிச்சயமானவர் ஜாக் என்று செல்லமாக அழைக்கப்படும் லியோனார்ட் டிகாப்ரியோ.

வரும் பிப்ரவரி மாதம் வழங்கப்படவுள்ள ஆஸ்கார் விருது நிகழ்ச்சிக்கு லியோனார்ட் நடிப்பில் வெளியான ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்’ என்ற படம் சுமார் 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த முறையும் டிகாப்ரியோவுக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் டிகாப்ரியோ அளித்துள்ள பேட்டியொன்றில் தனக்கு இந்தி படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது என்று கூறியுள்ளார். இந்தி படமொன்றில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், விரைவில் இந்தியில் நடிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of