“ஹாய் என்ன பண்றீங்க..” தெருவில் ஜாலியாக சுற்றும் சிறுத்தை.. பரபரப்பு வீடியோ..!

20692

உத்திரபிரதேச மாநிலம் காசிபாத் மாவட்டத்தில் உள்ள ராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் பிரசாத். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சிசிடிவி காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பில், மிகவும் சாதாரணமாக சிறுத்தை ஒன்று வலம் வருகிறது. 12 நொடிகள் கொண்ட இந்த சிசிடிவி காட்சி, தற்போது, இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோ அரசின் கவனத்திற்கு சென்றதையடுத்து, சிறுத்தையை பிடிப்பதற்காக 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், சிறுத்தையை பிடிக்கும் வரை, வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement