இயற்கையோடு இணைந்து வாழ்வோம் – பிரதமர் மோடி

302

இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்வது நல்ல எதிர்காலத்துக்கு வழி வகுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரதமர் மோடி நேற்று தனது டிவிட்டர் பதிவில் நமது கிரகம் மற்றும் சுற்றுச்சூழலால் நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

இன்று உலக சுற்றுச்சூழல் தினம். தூய்மையான கிரகத்தை உறுதிப்படுத்துவதற்காக நமது உறுதிபாட்டை வலியுறுத்துவோம். இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்வது நமக்கு நல்ல எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.

இதனுடன் வீடியோ பதிவு ஒன்றையும் அவர் இணைத்துள்ளார். அந்த வீடியோவில் மரக்கன்றுகளை நட்டால் மட்டும் போதாது மரமாக வளரும் வரை நாம் அதனை பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of