பிரதமருடன் குடியரசு அணிவகுப்பை பார்க்க மாணவிக்கு கடிதம்

272

கேரளா  பாலக்காட்டைச் சேர்ந்தவர் டாக்டர். நவீன் சிவதாஸ் – தீப்தி தம்பதியின் மகள் பாவனா 16. கடந்தாண்டு சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வில் தேசிய அளவில் பாவனா முதலிடம் பெற்றார்.

கல்வித்துறையில் தேசிய அளவில் சாதித்த 100 பேருடன் அமர்ந்து குடியரசு தின அணிவகுப்பை பிரதமர் மோடி காண உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பாலக்காடு மாணவி பாவனாவும் இடம் பெற்றுள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகத்திலிருந்து மாணவி பாவனாவிற்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது. மாணவி பாவனா கூறியதாவது:

நம் நாட்டின் பிரதமருடன் அமர்ந்து குடியரசு தின அணிவகுப்பை காணும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்நேரத்தில் என் பள்ளி ஆசிரியர்கள், எனக்கு ஊக்கம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வரும், 24 ல் பெற்றோருடன் டில்லி செல்கிறேன். என் பயணம், தங்குமிடம், உணவு அனைத்தையும் பிரதமர் அலுவலகமே ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of