சிலை மேலே ஏறினால் தான் தீர்ப்பு! அடம்பிடித்த நீதிபதி!

463

சுதந்திரம் பெற்று நூறாண்டுகள் ஆனதையொட்டி, நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில் இந்த லிபர்ட்டி சிலை பிரம்மாண்டமாக நிறுவப்பட்டுள்ளது.

போன வருஷம் ஜுலை மாதம், கோரிக்கை ஒன்றினை வலியுறுத்தி போராட்டம் செய்ய தெரஸா என்ற பெண் இந்த சிலை மீது ஏற முயன்றார். கொஞ்சதூரம்தான் ஏறியிருப்பார்.

அதற்குள் போலீசார் அவரை பார்த்துவிட்டு, சமாதானப்படுத்தி கீழேயும் இறக்கி விட்டனர். ஆனால் இந்த காட்சியை சில தனியார் டிவிக்கள் ஹெலிகாப்டரில் பறந்தபடியே லைவ்-ஆக ஒளிபரப்பு செய்தார்கள்.

இதைதவிர இணையத்திலும் வைரலானது. இது சம்பந்தமான வழக்குதான் நியூயார்க் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கை கேப்ரியேல் கோரேன்ஸ்டீன் என்ற நீதிபதி விசாரித்து வருகிறார்.

அப்போது,

“குற்றம் சாட்டப்பட்டவர் சிலையின் மீது என்னென்ன சேதத்தை ஏற்படுத்தினார், எந்தவிதமான ஆபத்தை ஏற்படுத்த முயன்றார் என்பதை எல்லாம் தெளிவாக தெரிய வேண்டும். அதற்கு சிலையின் மீது ஏறி பார்த்து ஆராய்ந்த பிறகுதான் தீர்ப்பு வழங்க முடியும்” என்று நீதிபதி சொல்லிவிட்டார்.

கடைசியில் சிலை மீது ஏற அரசின் அனுமதியையும் வாங்கிவிட்டார். தீர்ப்புக்காக சிலை மீது ஏறுவேன் என்று அடம்பிடிக்கும் நீதிபதியின் செயல்பாடு பெருத்த பரபரப்பை அந்நாட்டில் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of