தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் நூலகம் திட்டம் விரிவுபடுத்தப்படும் – வேலுமணி

434

தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் நூலகம் திட்டம் விரிவுபடுத்தப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள 40 காவல் நிலையங்களில் பொதுமக்கள் மற்றும் காவலர்கள் பயன்பெறும் வகையில் நூலகங்கள் அமைக்கும் திட்டம் கடந்த மாதம் துவக்கப்பட்டது.

இந்நிலையில் கோவை மாநகர பகுதிகளில் உள்ள 24 காவல் நிலையங்களில் நூலகம் அமைக்கும் திட்டத்தை அமைச்சர் எஸ் பி வேலுமணி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, காவல் நிலையத்தில் நூலகம் என்ற திட்டமானது மிகச்சிறந்த திட்டம் எனவும், இது மன உளைச்சலுடன் காவல் நிலையங்களுக்கு வரும் பொது மக்களுக்கும் காவல் நிலையங்களில் உள்ள காவலர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என கூறினார்.

இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கும் விரிவுபடுத்த முதலமைச்சரிடம் பரிந்துரைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of