கடன்களால் மூழ்கும் நிறுவனத்தில் எல்.ஐ.சி. பணம் முதலீடு

586

கடன்களால் மூழ்கும் நிறுவனத்தில் எல்.ஐ.சி. பணத்தை முதலீடு செய்வதற்கு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற உள்கட்டமைப்பு குத்தகை மற்றும் நிதி சேவைகள் நிறுவனம் கடன்களில் தத்தளிக்கிற நிலையில், இந்த நிறுவனத்தில் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பணத்தை முதலீடு செய்வதாக தெரிகிறது.

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, உங்களுக்கு பிடித்தமான தனியார் நிறுவனம் கடன்களால் மூழ்கிக்கொண்டிருக்கிறதே, எல்.ஐ.சி.

பணத்தை பயன்படுத்தி அதை ஏன் காப்பாற்ற விரும்புகிறீர்கள் என்று பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு பதிவில், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தூக்கிப்போட்டு ஏன் விளையாடுகிறீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளார்.