உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

86

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை நடத்தினர்.

தேர்தல் ஏற்பாடுகளை துரிதப்படுத்த உத்தரவிட்ட ஆட்சியர்கள், பதற்றமான வாக்குச் சாவடிகளை அடையாளம் கண்டு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தினர். தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு தெரிவித்தனர்.

துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் துப்பாக்கிகளை ஒப்படைக்க அறிவுறுத்தியுள்ளனர். தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பதற்காக 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், செல்போன் ஆப்கள் மூலம் அளிக்கப்படும் புகார்களுக்கு 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.