“யாராச்சு வாங்களேன்..” இளம்பெண்ணின் மூக்கில் ஒட்டப்பட்ட டேப்..! இறுதியில் நேர்ந்த கொடூரம்..!

527

கிருஷ்கிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கலுக்கொண்டப்பள்ளி என்னும் கிராமத்தில் வீட்டில் தனியாக இரண்டு பெண்கள் அமர்ந்திருந்தனர். அப்போது, வங்கியிலிருந்து வந்திருப்பதாக கூறி, 6 பேர் கொண்ட கும்பல் வீட்டில் நுழைந்து நகை மற்றும் பணத்தை கேட்டு மிரட்டினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த இரு பெண்களில் ஒருவரான சகிதா பானு பயத்தில் கூச்சலிட்டுள்ளார். சகிதா பானு தொடர்ந்து சத்தம் போடாமல் இருக்க கொள்ளை கும்பல் அவரது வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டுவதற்கு பதில், மூக்கில் ஒட்டியதாக கூறப்படுகிறது.

இதில் சகிதா பானு மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதையடுத்து பீரோவிலிருந்த 23 சவரன் நகையை 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் திருடிச் சென்றுள்ளது.

இந்த வழக்கில் குற்றவாளிகள் 6 பேரில் ஒருவர் 18 வயதிற்கு கீழ் உள்ளவர் என்பதால் அவரது வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்திலும், மற்ற 5 பேரின் வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது.

சுமார் 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் குற்றவாளிகளில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து மற்ற 4 பேருக்கும் ஓசூர் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனையுடன் சேர்த்து கூடுதலாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of