சென்னையில் மாலை நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

623

மத்திய மேற்கு வங்ககடல் பகுதி மற்றும் ஒடிசாவை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் நிலவி இருந்த “டயி” புயல் தெற்கு ஒடிசா பகுதிகளில் (கோபால்பூர்) அருகே நேற்று நள்ளிரவு கரையை கடந்தது, இருந்த போதும் ஒடிசா, சட்டிஸ்கர், ஆந்திரா, வங்க தேசம் உள்ளிட்ட மாநிலத்தில் அடுத்த சில தினங்களுக்கு கன மழை இருக்கும் என வாணிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாற்றத்தால் தமிழகத்திற்கு மழைக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை என்றாலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையில் மாலை நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது, என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 செ.மீட்டர் மழையும், மதுரை திருமங்கலம் பகுதியில் 4 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

Advertisement