ஒரே கருத்துடைய கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு

368

ஒரே கருத்துடைய கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இது குறித்து நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கே உரிய அரசியல் வியூகங்கள் உள்ளன.

ஆனால் ஒரே கருத்துடைய கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். இந்த கொள்கையில் காங்கிரஸ் நம்பிக்கை வைத்துள்ளது என்று தெரிவித்தார். மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்துவது எதிர்க்கட்சிகளின் குறிக்கோளாக உள்ளது என்றும், இந்த சூழ்நிலையில் தான் கட்சி தலைவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of