நித்தியானந்தா போல் ஸ்டாலின் தீவு வாங்கி அங்கு முதல்வராகலாம்

314

ராஜாஜி பிறந்த நாளை ஒட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகம் அருகேயுள்ள, அவரது சிலைக்கு  அமைச்சர்கள் ஜெயகுமார், பெஞ்சமின், பாண்டியராஜன் மற்றும் அதிகாரிகள், மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

அதன்பின் அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி:’குடியுரிமை சட்ட திருத்தத்தால் சிறுபான்மையின மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என  மத்திய உள்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

எதிர்க்க வேண்டிய விஷயங்களை எதிர்ப்பது ஆதரிக்க வேண்டிய விஷயங்களை ஆதரிப்பது அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.ஒட்டுமொத்த குழப்பவாதியாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளார். குழப்பமான கட்சியாக தி.மு.க. உள்ளது.

உள்ளாட்சிகளுக்கு 2016ல் தேர்தல் அறிவித்த போது தி.மு.க. தடை வாங்கியது. தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பு அளித்ததும் அதை வரவேற்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

தற்போது வழக்கு தொடர்ந்து உள்ளனர்.உள்ளாட்சி தேர்தலை வரவேற்பதாக தீர்மானம் நிறைவேற்றி விட்டு தடை கேட்டு, நீதிமன்றம் சென்றுள்ளனர்.

இவ்வளவு குழப்பத்திற்கு காரணம் முதல்வர் பதவி. முதல்வராக நினைப்போர் நித்தியானந்தா போல ஒரு தீவு வாங்கி அங்கு முதல்வராக அறிவித்துக் கொள்ளலாம். அவர்களிடம் உள்ள பணத்திற்கு தீவு வாங்கி முதல்வர் ஆகலாம். ஆனால் தமிழகத்தில் முதல்வராக முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.