நியூயார்க் நகரில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 20 பேர் உயிரிழப்பு

386

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

நியூயார்க் நகரின் புறநகர் பகுதியான ஸ்கோஹரீ எனும் இடத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த 20 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. திருமண கோஷ்டியினர் சென்ற சிறப்பு வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.

திருமண கோஷ்டியினரின் வாகனம் மலைப்பகுதியில் இருந்து கீழே வேகமாக இறங்கி வந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் வாகனத்தில் பயணித்தோர் மட்டுமின்றி, அப்பகுதியில் நடந்து சென்றோரும் கூட இதில் பலியாகி இருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. விபத்து குறித்த தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of