தாய் சிங்கத்தை பயமுறுத்திய குட்டிச் சிங்கம்.. – வைரலாகும் சேட்டை வீடியோ..!

873

ஸ்காட்லாந்தில் தாய் சிங்கத்தை பின்பக்கமாக இருந்து பயம் காட்டும் குட்டிச் சிங்கத்தின் வீடியோ சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


ஸ்காட்லாந்தின் எடின்பெர்க் உயிரியல் பூங்காவில் தாய் சிங்கம் ஒன்று, மூன்று குட்டிகளுடன் வாழ்ந்து வருகிறது. இதில் தாய் சிங்கத்தின் முன்புறத்தில் இரண்டு சிங்கக் குட்டிகள் விளையாடிக் கொண்டிருக்க, பின்புறத்தில் மெதுவாக நடந்து வந்த மூன்றாவது குட்டி தாயை நெருங்கியதும் திடீரென கத்தி பயம் காட்டியது.

இதில் அதிர்ச்சியுற்ற தாய் சிங்கம் கர்ஜனையுடன் வேகமாக திரும்பிப் பார்த்து தனது குட்டி என்று தெரிந்தவுடன் அமைதியாக அமர்ந்தது.

இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை எடின்பெர்க் பூங்கா நிர்வாகம், தனது முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Lion cubs at Edinburgh Zoo

Trying to relax when you have little ones ??#Relatable

Edinburgh Zoo यांनी वर पोस्ट केले शुक्रवार, ४ ऑक्टोबर, २०१९

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of