“204” சிங்கங்கள் உயிரிழப்பு!! உயிரின ஆர்வலர்கள் அதிர்ச்சி!!

483

தற்போது சிங்கங்களின் எண்ணிக்கை ஆசியாவில் குறைந்து கொண்டே போகிறது. தற்போது ஆசியாவில் சிங்கங்களின் கடைசி புகலிடமாக குஜராத் தான் விளங்குகிறது.

இங்குள்ள கீர் வனப்பகுதியில், சில நூறு சிங்கங்களே தற்போது மிஞ்சி உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக இங்கு வசிக்கும் சிங்கங்கள் உயிரிழந்து வருவது அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 94 குட்டிகள் உள்பட 204 சிங்கங்கள் இறந்துள்ளன. இவை தவிர 250க்கும் அதிகமான சிறுத்தைகளும் இறந்துள்ளன.

சிங்கங்கள் மற்றும் சிறுத்தைகளின் தொடர் உயிரிழப்பு வன உயிரின ஆர்வலர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.