என் அருமை “Foodies”-களே… உங்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்

367

ஒரு சிலருக்கு சாப்பிடுவதென்றால் பிடிக்காது; சிலர் வாழ்வதற்காக சாப்பிடுவார்கள்; ஆனால், ஒரு சிலர் மட்டும் தான் சாப்பிடுவதற்கென்றே வாழ்வார்கள்.

நாம் எந்த மாதிரி சாப்பிட்டால் என்ன நோய்கள் வரும் என்பதை கீழ்கண்டவற்றில் பார்க்கலாம்.

உண்ணுதல் கோளாறு (Eating Disorder) :

ஒருவர் எப்பொழுது அதிகமாகவோ அல்லது குறைந்தோ உணவை எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கிறார்களோ அப்பொழுதுதான் பிரச்சனை ஆரம்பமாகின்றது. இதனால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு கண்டிப்பாக மனதளவிலும் பாதிப்பு இருக்கும்.

(எ-கா) : உடல் எடை அதிகரிக்கும் என்ற பயம், தனிமையான ஆதரவற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை மற்றும் வீட்டுப் பிரச்சனைகள். எந்த பிரச்சனையினால் மனதளவில் பாதிக்கப்படுகிறோமோ அதுவே பின்வர கூடிய நோய்க்கு அடித்தளமாக அமைந்துவிடும்.

பசியற்ற உளநோயில் 6 வகைகள் இருக்கின்றது :

1.பைக்கா (Pica) 

உண்ணவே கூடாத, சத்துக்களே இல்லாத காகிதம், அழிரப்பர், பென்சில், மண், சிலேட்டுக்குச்சி போன்றவற்ற சாப்பிடுவார்கள். கர்ப்பிணிபெண்கள் சாம்பல் சாப்பிடுவதும் கூட இந்த வகையில் தான் வரும்.Pica

2.அசை போடும் கோளாறு (Rumination Disorder)

இந்த கோளாறு உள்ளவர்கள் உணவு சாப்பிடுவதில் விருப்பம் இல்லாமல் சாப்பிடுவதை தவிர்த்து வருவார்கள். கொஞ்சம் சாப்பிட்டாலும் அது தானாகவே வாய்க்கு வந்துவிடும். அதை மீண்டும் சாப்பிடுவதோ அல்லது துப்பிவிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்

3.உணவை தவிர்க்கும் கோளாறு (Avoidant/Restrictive Food Intake Disorder-ARFID)

இவர்களுக்கு உணவு உண்பதில் ஆர்வம் இல்லாமல் எந்தவித உணவு பொருட்களை செய்து வைத்தாலும் பிடிக்கவில்லை என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லி தவிர்த்து வருவார்கள்.ARFID

4.பசியற்ற உளநோய் (Anorexia Nervosa) 

ஒல்லியாக இருந்தால் தான் அழகு என்ற எண்ணமும், SIXPACK மோகமும் அதிகமாக இளைஞர்கள் மத்தியில் பரவி இருப்பதால் சரியான உடல் எடை இருந்தாலும் அதிகமான எடை இருப்பதாக நினைத்து குறைவான உணவையே சாப்பிடுவார்கள். இதன் விளைவாக..,உடலில் சத்து இல்லாமல் போதல், எலும்பும் தோலுமாதல், தோல் வறண்டு போதல் மற்றும் எலும்பு தேய்மானத்தில் தொடங்கி பல்வேறு பிரச்சனைகளில் கொண்டு வந்து விட்டுவிடும்.

5.பெரும்பசி உளநோய் (Bulimia Nervosa)

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த நேரத்தில் சராசரி மனிதனைக்காட்டிலும் அதிகமான உணவை சாப்பிடுவார்கள். சுயக்கட்டுப்பாடு இல்லாமல் இவர்கள் இவ்வாறு அதிகமா சாப்புடுவதும் அதன் பின்பு அதை நினைத்து வெட்கமும் வெறுப்பும் அடைவதும் வழக்கம் தான்.Bulimia-Nervosa

6.மிதமிஞ்சி உண்ணும் கோளாறு (Binge Eating Disorder) 

அளவுக்கு அதிகமாக உண்ணும் கோளாறு என்பது ஒரு பெரும்பசி நோயினை போல தான். ஒரு வித்தியாசம் என்னவென்றால், இவர்கள் சாப்பிட்ட பின்பு அதை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடமாட்டார்கள். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாகவே பருமனாகத்தான் இருப்பார்கள்.

இத்தனை நாளாக இப்படியும் ஒரு நோய் இருக்கின்றதா என்று தெரியாமல் இருந்துருப்பீர்கள். அதனால் இதை கண்டு அதிர்ச்சி அடையாமல் இனி வரக்கூடிய  காலங்களில் இதனை தவிர்ப்பதற்கு முயற்சி எடுங்கள்.

வளரக்கூடிய பருவத்துல் அதிகமாக சாப்பிடுவதும், பின்பு..,ஏதாவது விழாக்களின்போதும் பிடித்த உணவை அதிகம் சாப்புடுவதும் இயற்கை தான்… இதற்கும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதற்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றது. அதனால் மண்டைய போட்டு குழப்பிக்கொள்ளாமல் தைரியமாக இருங்க.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of