இந்தியாவின் 100 பிரபலமானவர்கள் பட்டியல்… இடம்பிடித்த ரஜினி, விஜய், அஜித்.!

670

போர்ப்ஸ் வெளியிட்ட இந்தியாவின் செல்வாக்குமிக்க 100 பிரபலமானவர்கள் பட்டியலில் நடிகர்கள்இடம்பிடித்துள்ளனர்.

2019ம் வருடத்திற்கான போர்ப்ஸ் பட்டியலில் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவின் 100 பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய், அஜீத்,ரஜினி, தனுஷ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இந்த தகவல் எதன் அடிப்படையில் வரிசைப்படுத்துவார்கள் என்றால் இந்த வருட ஈட்டப்பட்ட வருவாய் மற்றும் புகழ் அளவை மையமாக வைத்து இந்த வரிசை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதலிடத்தில் கிரிகெட் வீரர் விராட் கோலி உள்ளார். இவர் 2019ம் ஆண்டில் 252 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் அக்‌ஷ்ய் குமாரும் மூன்றாவது இடத்தில் சல்மான் கானும் உள்ளார்.

அதிகமாக கிரிக்கெட் வீரர்களையும் கொண்டுள்ள இந்த பட்டியலில் தமிழ் சினிமாவை சேர்ந்த ரஜினி 13 வது இடத்தையும் இசையமைப்பாளார் ஏ.ஆர்.ரகுமான் 16வது இடத்தையும், நடிகர் விஜய் 47வது இடத்தையும் நடிகர் அஜித் 52வது இடத்தையும் தனுஷ் 64 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அதே போல் பட்டியலில் இயக்குநர் ஷங்கர்,சிவா,கார்த்திக்,சுப்புராஜ் ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement