எங்கள யாராலும் தடுக்க முடியாது.., திரும்ப வருவோம்.., ஆனா?

776

நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் நாளை திரைகளத்தை காண உள்ள படம் தான் எல்.கே.ஜி. இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த டிரெய்லரில் ஆந்திர மக்களை “வந்தேறிகள்” என குறிப்பிடுவதாக வசனங்கள் இடம் பெற்றதாக கூறப்படுகிறது.இதையடுத்து, தமிழ் தெலுங்கு தேசிய கட்சியின் தலைவர் ராஜகுமார நாயுடு சென்னை பெருநகர முதலாவது உரிமையில் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார். அந்த வழக்கில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக தெலுங்கு பேசும் மக்கள் குறித்து தவறான புரிதலை ஏற்படுத்தும் வசனங்களுடன் வெளியாக உள்ள எல்.கே.ஜி (L.K.G) படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி, தயாரிப்பாளர் சார்பில் சம்மந்தப்பட்ட வசனங்களை நீக்கப்பட்டதாகவும் அதற்கான சிடி ஆதாரங்களை தாக்கல் செய்தானர்.

இதனை அடுத்து நீதிபதி தமிழரசி இந்த வழக்கை தள்ளுபடி செய்து திட்டமிட்டபடி நாளை திரைப்படத்தை வெளியிட அனுமதி வழங்கி உத்திரவிட்டார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of