5 சவரன் வரையிலான விவசாய நகைக்கடன்கள் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – மு.க.ஸ்டாலின்

1049

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பெற்ற 5 சவரன் வரையிலான விவசாய நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

திமுக வெற்றி பெற கூடாது என்பதற்காக, பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மேலும், கூட்டுறவு, பொதுத்துறை வங்கிகளில் 5 சவரன் வரை நகைகளை வைத்து விவசாயிகள் பெற்ற கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்றும் இந்த வாக்குறுதி தேர்தல் அறிக்கையில் இணைக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of