உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநில தேர்தல் ஆணையம்

440

உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவியிடங்கள் ஏலம் விடப்படுவது மக்களின் உணர்வுகளுக்கு உறுவிளைவிக்கும் செயல் என்று கூறியுள்ளது.

மக்களாட்சி தத்துவத்திற்கு புறம்பாக நடைபெறும் இத்தகைய செயல்கள் மிகவும் வருந்தத்தக்கது என தெரிவித்துள்ளது. இதுபோன்ற செயல்கள் மக்களாட்சிக்கு எதிரானவை என்பதை மக்கள் உணர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

ஜனநாயகத்திற்கு ஊறுவிளைப்பதை தடுக்க, தேர்தல் அலுவலர்கள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement