ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு..!

559

தமிழகத்தில் நீண்ட நாட்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இன்று தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 9-ஆம் தேதி தொடங்கி, 16-ஆம் தேதி வரை நடைபெறும். தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள், டிசம்பர் 17-ஆம் தேதி அன்று பரிசீலனை செய்யப்படும்.

வேட்பு மனுக்கள் வாபஸ் செய்வதற்கான கடைசி நாள், டிசம்பர் 19-ஆம் தேதி. முதற்கட்ட தேர்தல், டிசம்பர் 27-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் 30-ஆம் தேதியும் நடைபெறும்.

மாவட்ட, ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11-ஆம் தேதி நடைபெறும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of