உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம்..!

649

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை திரும்பப்பெற்று தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கிராம்ப்புறங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெர்தல் நடத்துவதற்கான அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

உள்ளாட்சி தேர்தல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை தவிர்த்து மற்ற ஊராட்சி அமைப்புகளுக்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தவேண்டும் எனவும், மறுவரையறை செய்யாமல் இருப்பதால் மறுவரையறை செய்து தேர்தல் நடத்தவேண்டும் என திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் அட்டவணைக்கான அறிவிப்பாணையை  தேர்தல் ஆணையம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அட்டவணை விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement