மாமாவுக்கு ஓட்டு போடுங்க… மாணவியின் பிரச்சாரம்

712

சிவகங்கையில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் களம் கலைகட்டியது. மாமாவுக்கு ஓட்டு போடுங்க என்று பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மாணவி ஒருவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்டம் மேலராங்கியம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் மருதுபாண்டி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வந்தார்.

அவருடன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோ பெள்ளர் என்ற பெண் “வோட் பார் மாமா” என கோஷமிட்டபடியே வந்ததால் ஊர்வலத்தில் கலகலப்பு ஏற்பட்டது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண், தனது மருமகனின் நண்பர் என்றும் தமிழகத்திற்கு சுற்றுலா வந்த நிலையில் தேர்தலை காண கிராமத்திற்கு வந்ததாகவும் மருதுபாண்டி தெரிவித்தார்.

Advertisement