உள்ளாட்சித் தேர்தல் : தி.மு.க. தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணை

222

ஊரக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக் கோரி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள்  சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில்1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி விதிகளின்படி அனைத்து நிலைகளிலும் விகிதாச்சார இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய  பின்பு உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய அறிவிப்பை  வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of