திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளரின் பெயர் 10-ஆம் தேதி அறிவிக்கப்படும் – தம்பிதுரை

450

திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளரின் பெயர், வரும் 10-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு 52 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். வேட்பாளருக்கான நேர்காணல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க வேட்பாளரின் பெயர், ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றார். இந்நிலையில், திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, அதிமுக வேட்பாளாரின் பெயர், வரும் 10 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும், திருவாரூரில், அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதால் தான், 52 வேட்பாளர்கள் விருப்ப மனு அளித்திருக்கின்றனர் என்றும், இந்த இடைத்தேர்தலில் அதிமுக ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.