5 வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம் – MP-க்கள் தொடர் அமளி

363

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்  2 வது அமர்வு கடந்த 2-ந் தேதி மீண்டும் தொடங்கியது.

டெல்லி வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் எதுவும் நடைபெறாமல் முடக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மக்களவை  கூடியதும், டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக விவாதிக்க கோரியும்,  உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வலியுறுத்தியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.  இதனால், மக்களவை வரும் 11ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.