மக்களவை தேர்தலில் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் – திருமாவளவன்

672

மக்களவை தேர்தலில் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி மரியாதை நிமித்தமாக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். இதன் ஒருபகுதியாக நேற்று சென்னை அசோக் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, மோடி அரசின் சர்வாதிகார போக்கால், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய திருமாவளவன், மக்களவை தேர்தலில் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார்.

Advertisement