மக்களவைத் தேர்தலையொட்டி ரௌடிகள் கைது நடவடிக்கை தீவிரம்

665

மக்களவைத் தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரௌடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரத்தின்போதும் வாக்குப்பதிவின்போது எவ்வித சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது.

இதற்காக காவல்துறையின் சார்பில் மாவட்டந்தோறும் காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்களிடமிருந்து துப்பாக்கிகளை அந்தந்த காவல் நிலைய போலீஸார் பெற்று வருகின்றனர். கடந்த தேர்தலின்போது பிரச்னை ஏற்பட்ட வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் ஆகியவற்றை போலீஸார் கண்டறிந்து வருகின்றனர்.

அங்கு வாக்குப் பதிவின்போது செய்யப்பட வேண்டிய கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
வாக்குப்பதிவை அமைதியாக நடத்துவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ரௌடிகளை கணக்கெடுக்கும் பணியில் சில நாள்களுக்கு முன்பு வரை போலீஸார் ஈடுபட்டனர்.

இந்த ரௌடி பட்டியல் தயாரிக்கும் பணி முழுமை அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில் மாநிலம் சுமார் 17,500 ரௌடிகள் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பட்டியலின் அடிப்படையில் ரௌடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 107,109,110 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் நடவடிக்கை எடுக்கின்றனர்.
சென்னையில் 750 ரௌடிகள் சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 750 ரௌடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது.

Advertisement