சர்கார் படபாணியில் ஓட்டுபோட்ட “கோபிநாத்!”

760

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான சர்கார் படத்தில் தன்னுடைய ஓட்டை இன்னொருவர் போட்டு விட்டார் என்று வாதாடி ஜெயிப்பது போன்று கதை அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த திரைப்படத்தில் நடைபெற்றது போன்று, தற்போது நிஜ வாழ்க்கையிலும் நடைபெற்றுள்ளது.

சென்னை, தாம்பரத்தை அடுத்த முடிச்சூரைச் சேர்ந்தவர், கோபிநாத், தனியார் மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர். நேற்று காலை 11 மணிக்கு, முடிச்சூரில் உள்ள தனியார் பள்ளிக்கு, ஓட்டளிக்க வந்தார்.

அவரது ஓட்டு, ஏற்கனவே, பதிவானதாக, ஓட்டுப்பதிவு மைய அலுவலர்கள் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த கோபிநாத், ஓட்டுச்சாவடி ஊழியர்களுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தனக்கு, டெண்டர் ஓட்டு எனப்படும், ஆய்விற்குரிய ஓட்டு பதிய அனுமதிக்குமாறு, ஓட்டுச்சாவடி ஊழியர்களிடம் கோரிக்கை வைத்தார். இதை தொடர்ந்து சர்கார் பட பாணியில், ’49 பி’ விதியின்படி, ’17 பி’ படிவத்தில் கையெழுத்து பெறப்பட்டு, ’17 ஏ’ படிவத்தில், அவரது ஓட்டை, கோபி நாத் பதிவு செய்தார்.

இதேபோல், முடிச்சூரைச் சேர்ந்த, ராஜாஜி என்பவரின் ஓட்டும், கள்ள ஓட்டாக பதிவானது. அவருக்கும், ’49 பி’ விதியின் கீழ் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of