குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம்

640

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. சில இடங்களில் டயர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.

தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அசாம், அருணாசலப் பிரதேசம், மேகாலயம், நாகாலாந்து, மிஸோரம், மணிப்பூர்,  திரிபுரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அமைப்புகள் இணைந்து முழுஅடைப்பு போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்து இருந்தன. அதன்படி, இன்று காலை 5 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் துவங்கியது.  அசாம் மாநிலத்தில் கடைகள் முழுவதும்  அடைக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் மாணவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர், மேலும் சில இடங்களில் சாலைகளின் நடுவே டயர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் பதற்றம் நிலவுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of