லோக்பால் உறுப்பினர்கள் தேடல் குழு அமைப்பு

440
Supreme-court

லோக்பால் அமைப்புக்கு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை பரிந்துரைப்பதற்கான தேடல் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

பிரதமர், மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என பொது வாழ்வில் உள்ளவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக, லோக்பால் மசோதா கடந்த 2013-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும் லோக்பால் அமைப்பை உருவாக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் லோக்பால் அமைப்பின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை பரிந்துரைப்பதற்கான தேடுதல் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய், எஸ்.பி.ஐ. முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா, பிரசார் பாரதி முன்னாள் தலைவர் சூரிய பிரகாஷ், இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண் குமார் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு பரிந்துரைக்கும் நபர்களை, பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர் ஆகியோர் இறுதி செய்து, லோக்பால் உறுப்பினர்களை நியமனம் செய்ய உள்ளனர்