சொர்கத்திற்கு கடிதம் எழுதிய சிறுவன்… கடிதத்தை கொண்டு சேர்த்த தபால் நிலையம்!

465

லண்டனை சேர்ந்த ஜெஸ் என்ற 7 வயது சிறுவன் தான் எழுதிய கடிதத்தை சொர்கத்தில் இருக்கும் தனது தந்தைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டதை தனியார் அமெரிக்க தபால் சேவை நிறுவனம் ஒன்று நிறைவேற்றி உள்ளது.

லண்டனை சேர்ந்தவர் தெரி காப்லாண்ட். கணவரை இழந்த இவருக்கு ஜெஸ் எனும் 7 வயது மகன் இருக்கிறார். தனது தந்தையின் பிறந்தநாளையொட்டி ஜெஸ் எழுதிய கடிதத்தில், ”சொர்கத்தில் இருக்கும் எனது தந்தைக்கு இதனை அனுப்பி விடுங்கள் அவருக்கு பிறந்த நாள் வருகிறது” என்று எழுதி தபால் சேவை நிறுவனத்திற்கு அனுப்பி உள்ளார்.

இதற்கு, தபால் சேவை நிறுவனமான, ராயல் மெயிலில் பணிபுரியும் ஷான் என்பவர் அந்த சிறுவனுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “நட்சத்திரங்களையும், விண்வெளியில் இருந்த மற்றவைகளையும் தாண்டி இந்த கடிதத்தை கொண்டுசெல்வது மிக சவாலான ஒன்றாக இருந்தது. ஆனால் நாங்கள் பத்திரமாக இதனை கொண்டு சேர்த்து விட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரி காப்லாண்ட் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில், “சில வாரங்களுக்கு முன்பு தனது மகன் இந்த கடிதத்தை அனுப்பியதாகவும் அதற்கு தற்போது அழகான பதில் வந்துள்ளதென்றும் அதில் அவர்கள் தனது மகன் அனுப்பிய கடிதம் தந்தையிடம் சென்றுவிட்டதாகவும் அதனை அறிந்த பிறகு தனது மகனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி குறித்து தன்னால் விளக்க முடியில்லை” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of