நிரவ் மோடியின் மனு நான்காவது முறையாக நிராகரிப்பு – ராயல் கோர்ட்

133

நிரவ் மோடியை நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. இந்த நிலையில் அவர் லண்டனில் கடந்த மார்ச் 19-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

20-ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் தரப்பில் ஜாமீன் மனு தாக்கலானது. ஆனால் அதை நீதிபதி மேரி மல்லான் தள்ளுபடி செய்துவிட்டார். அதைத்தொடர்ந்து நிரவ் மோடி சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது நீதிமன்றக்காவல், கடந்த மார்ச் 29-ம் தேதி முடிந்தது. அன்றைய தினம் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது சார்பில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நிரவ் மோடி ஜாமீன் கோரி இங்கிலாந்தின் ராயல் கோர்ட் முன் நான்காவது முறையாக இன்று ஆஜரானார். ஏற்கனவே மூன்று முறை அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், 4வது முறையாக இன்றும் அவரது ஜாமீன் மனுவை இங்கிலாந்து கோர்ட் நிராகரித்துள்ளது

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of