நிரவ் மோடி – நவம்பர் 11ம் தேதி வரை காவல் நீட்டிப்பு | Westminster court

236

குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் சுமார்13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால், நிரவ் மோடியை லண்டன் போலீசார் கடந்த மார்ச் 19-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை ஜாமீனில் விட லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டு மறுத்ததுடன், நீதிமன்றக் காவலை நீட்டித்தது. தொடர்ந்து அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நிரவ் மோடியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக வெஸ்ட் மின்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நிரவ் மோடியின் காவலை வரும் நவம்பர் 11-ம் தேதி வரை நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of