லாரியின் பின்சக்கரம் ஏறி ஒருவர் பலி..! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

374

கடலூரை அடுத்த சாவடி வண்ணான்தெருவை சேர்ந்த முருகன் என்பவர் கடந்த19 ம் தேதி தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து, இருசக்கர வாகனத்தில் தூக்கனாம்பாக்கம் என்ற இடத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

புதுச்சேரி குருவிநத்தம் தூக்குபாலம் அருகே வந்துகொண்டிருந்த போது, எதிரில் வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதியது.

இதில் முருகன் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தபோது, லாரியின் பின்சக்கரம் அவரது தலை மீது ஏறியது.

இந்த கோர விபத்தில் முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த பதைபதைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of