பிரேக் பிடிக்காத லாரி சுவரில் மோதி விபத்து – நூலிழையில் உயிர் தப்பிய பள்ளி மாணவர்கள்

645

தருமபுரியில் பிரேக் பிடிக்காத லாரியால் நிகழவிருந்து பெரும் விபத்தில், நூலிழையில் பள்ளி மாணவர்கள் உயிர் தப்பிய பரபரப்பு சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளது.

தருமபுரி ரயில் நிலையத்திலிருந்து அரிசி  மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி பிரேக் பிடிக்காததால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே பள்ளி வாகனம் மீது மோத இருந்தது.

ஆனால் சாதூரியமாக செயல்பட்ட லாரி ஓட்டுநர் உடனடியாக லாரியை திருப்பியதால், பிரேக் பிடிக்காத லாரி மருத்துவமனையில் சுற்றுச் சுவரில் மோதி நின்றது.

Advertisement