பாரம் தாங்காமல் கவிழ்ந்த லாரி! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சி!

1000

சாலை விபத்துகளில் உயிரிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

வேகமாக வாகனத்தை இயக்குதல், மதுபோதையில் வாகனத்தை ஓட்டுதல், அதிக பொருட்களை ஏற்றிக்கொண்டு வாகனத்தை ஓட்டுதல், சாலை விதிகளை சரியாக பின்பற்றாமல் இருத்தல் உள்ளிட்டவை சாலை விபத்துக்களால் உயிரிழப்பதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு சாலையில் வேகமாக வந்துக்கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பாரம் தாங்காமல் கவிழ்ந்தது.

இதில் சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.